கிர்ணி பழம் (அ) முலாம் பழம் பற்றிய தொகுப்பு மற்றும் அதன் பலன்கள் | Health benefits of muskmelon | muskmelon juice

கிர்ணி பழம்

கேண்டலூப், ராக்மெலன் ,ஸ்வீட் முலாம்பழம் அல்லது ஸ்பான்ஸ்பெக் என்பது ஒரு முலாம்பழம் ஆகும்.
இது குக்குர்பிடேசி குடும்பத்தில் இருந்து வரும் பலவிதமான கஸ்தூரி இனங்கள்  ஆகும்.(குகுமிஸ் மெலோ)


கிர்ணி பழம் பற்றிய செய்திகள்:

அழகு குறிப்புகள்:

பெண்களின் அழகைப் பாதுகாக்கும் கிர்ணிப்பழம்:

 கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சித்தரும் பானமாக நாம் அருந்தும் கிருணிப்பழம், பெண்களின் அழகை பாதுகாக்கும் கவசமாக பயன்படுகிறது. கிருணிப்பழத்தில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் உள்ளதால், கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது.
* தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து சருமம் வறண்டு காட்சியளிப்பவர்கள் கிருணிப்பழ ஜுஸ், வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து தடவினால் தோல் மிருதுவாகும். 
* கிருணிப்பழ விதையைக் காய வைத்த பவுடர் 100 கிராம்,ஓட்ஸ் பவுடர் 100 கிராம் எடுத்து அத்துடன் தேவையான அளவு வெள்ளரி ஜுஸ் கலந்து பசையாக்கி. கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளித்தால், எண்ணெய் தேய்த்துக் குளித்தது போன்று குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும். (ஓட்ஸ், சருமத்துக்கு நல்ல நிறத்தை தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிருணி விதை, தலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்).
*  சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லாக இருக்கும், அவர்கள் கிருணிப்பழத்துண்டு ஒன்றை எடுத்து மசித்து முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். 
* நூறு கிராம் கிருணி விதையுடன் பயத்தம் பருப்பு, சீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலைக்குத் தேய்த்து குளித்து வர, தலைமுடி சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.
* இரண்டு தேக்கரண்டி வெள்ளரி ஜூஸூடன், இரண்டு தேக்கரண்டி கிருணிப்பழ விழுதைச்சேர்த்து 4 (அ) 5 துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டு எங்காவது வெளியில் போகும் போது இதை இயற்கை சென்ட் ஆகப் பயன்படுத்தலாம். 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாது. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.
*  சிலருக்கு கை, கால், முகத்தில் தேவையில்லாத முடிகள் முளைக்கும், இதற்கு கிருணிப்பழ விதை பவுடர், ஓட்ஸ் பவுடர், கோரைக்கிழங்கு பவுடர், ஆவாரம்பூ பவுடர் தலா 100 கிராம் எடுத்து விழுதாக அரைத்துத் தேய்த்துக் குளித்து வர முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவாரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.
*  வயோதிகத்தின் அறிகுறி கண்களில் தான் முதலில் தெரியும். இதற்கு பால் பவுடர், கிருணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்து, தண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி, 5 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். சுருக்கங்கள், தொய்வு, கருவளையம், சோர்வு நீங்கி, கண்கள் பிரகாசிக்கும்.
*  கடுகு எண்ணெய்யுடன், கிருணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால் பஞ்சு போல் மிருதுவாகும்.

கிர்ணி பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:
 • பசியின்மையை போக்குகிறது.
 • எடை குறைவில் உதவுகிறது.
 • மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
 • சிறுநீர் பாதைக் கோளாறுகளை சரிசெய்யும்.
 • வயிற்றில் அமிலத் தன்மை மற்றும் அல்சரிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
 •  உடல் சூட்டைத்  தணிக்கும்.
 • கிர்ணிப் பழமத்தில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோடின்  போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து உள்ளன.
 • நிக்கோட்டின் பாதிப்பிலிருந்து நுரையீரலை  பாதுகாக்க உதவுகிறது.
 • சிறுநீரகத்தில் உள்ள கல்லை கரைக்கும் தன்மைக் கொண்டது. 
 • தூக்கமின்மையால் அதிகப் பேர் பாதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கான சிறந்த மருந்து இந்த பழம். 
 • இப்பழம் உடலில் உள்ள நரம்பு மற்றும் சதையை ரிலாக்ஸ் செய்து தூக்கத்தினை தருகிறது. 
 • இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
முகத்திற்கு அழகு சேர்க்கிறது:
கிர்ணிப்பழத் துண்டை மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
கோடை வெயிலிருந்து நம் உடலை காத்துக்கொள்ள அனைவரும் கட்டாயம் உண்ணவேண்டிய  பழம் இது.


கிர்ணி பழம் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவுகள்:
Comments

Popular posts from this blog

Agar agar milk pudding recipe at home