
தர்பூசணி பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்: தர்பூசணி பழம் விலை மலிவான கோடைகாலத்தில் கிடைக்கக்கூடிய அற்புதமான பழம் ஆகும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் ஆகும். இதை சாப்பிடுவதால் நாம் அடையும் பலன்கள் பற்பல. அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம். தர்பூசணி பழத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய ஆரோக்கியமான பானம். கோடைகாலத்தில் அதிகமாக வியர்வை வெளியேறும். அதனால் தாகம் அதிகம் ஏற்படும். இக்காலங்களில் நீர்சத்து நிறைந்துள்ள பழங்களை அதிகம் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் நீர்சத்து இழப்பை அது சமன்செய்து விடும். சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இயங்க தர்பூசணி பழம் உதவுகிறது. உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்ற உதவுகிறது தர்பூசணி பழம் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சி அளித்து புத்துணர்ச்சி கிடைக்கிறது. தர்பூசணி பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர் சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க உதவுகிறது. உடலுக்கு தேவையான தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சி